FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கனடா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி

கனடாவின் வடக்கு ஒன்டாரியோ நகரில் திங்கள்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று குழந்தைகள் உட்பட 5 பேர் இறந்து கிடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

2 பிப்ரவரி 2024, 8:43 am IST
கோப்புப் படம்
பகிர்:

ஒட்டாவா(கனடா): கனடாவின் வடக்கு ஒன்டாரியோ நகரில் திங்கள்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று குழந்தைகள் உட்பட 5 பேர் இறந்து கிடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் தெரிவித்ததாவது: ஒன்டாரியோ நகரின் மாரோ சால்ட் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு உள்ளூர் நேரம்ப்படி10.20 மணிக்கு இரண்டு வீடுகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. 

Advertisement

Advertisement

இதில், 41 வயதான ஒருவரும், 45 வயதான ஒருவரும், ஆறு, ஏழு மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக சுமார் பத்து நிமிட இடைவெளியில் தகவல் வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தனக்குத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார். 

இந்த துப்பாக்கிச் சூடு குடும்ப பிரச்னை காரணமாக நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களினால் பொதுகமக்களுக்கு எந்தவித அச்சுறுத்த்தல்களும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments