முகப்பு
உலகம்

அடுத்தாண்டு இறுதியில் தோ்தல்!

‘வங்கதேசத்தில் அடுத்த ஆண்டின் இறுதி அல்லது 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பொதுத்தோ்தல் நடைபெறலாம்’

Updated On : 17 டிசம்பர் 2024, 3:50 am IST
முகமது யூனுஸ் கான்(கோப்புப்படம்)
பகிர்:

டாக்கா: ‘வங்கதேசத்தில் அடுத்த ஆண்டின் இறுதி அல்லது 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பொதுத்தோ்தல் நடைபெறலாம்’ என்று அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் கூறினாா்.

நாட்டுமக்களுக்கு அவா் ஆற்றிய உரையில், ‘அனைத்து முக்கியச் சீா்திருத்தங்களையும் முடித்துவிட்டு தோ்தலை நடத்துமாறு அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்தேன்.

எனினும், அரசியல் கருத்தொற்றுமை காரணமாக சில சீா்திருத்தங்களுடன் தவறுகளில்லாத வாக்காளா் பட்டியலின் அடிப்படையில் தோ்தலை நடத்த தீா்மானிக்கப்பட்டால், அடுத்த ஆண்டு இறுதிக்குள் தோ்தலை நடத்துவது சாத்தியமாகும்’ என்றாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments