118 புதிய எமோஜிகள் அறிமுகம்!
ஆப்பிளின் அடுத்த ஐஓஎஸ்-ல் 118 புதிய எமோஜிகள் அறிமுகமாக உள்ளன.
118 வகையான புதிய எமோஜிகள் ஆப்பிளின் ஐஓஎஸ் 17.4-ல் வெளியாகவுள்ளன. செப்டம்பர் 2023ன் எமோஜி 15.1-ல் யுனிக்கோடின் பரிந்துரைக்களால் ஈர்க்கப்பட்டு இந்த புதிய எமோஜிகள் வெளியிடப்படுவதாகக் கூறப்படுகிறது.
6 புதிய கருத்துக்களோடும், 4 பாலினம் சாராத எமோஜி குடும்பங்களும், 6 புதிய மனிதர்கள் வடிவ எமோஜிகளும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதையும் படிக்க: ஜெமினியாகும் கூகுள் பார்டு?
Advertisement
Advertisement
இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு குழந்தை, இடது வலது மற்றும் மேலும் கீழும் தலையை ஆட்டும் எமோஜிகள், புதிய நிறங்களில் மனிதர்கள், பீனிக்ஸ் பறவை, அறுந்துகொண்ட சங்கிலி போன்ற புதிய எமோஜிகளை இந்த ஐஓஎஸ் கொண்டுள்ளது.
புதிய எமோஜிகளில் சில படங்களை ஆப்பிள் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.