முகப்பு
உலகம்

"எண்ணங்கள் மூலம் கணினியைக் கட்டுப்படுத்தலாம்!": மெட்டா

எண்ணங்கள் மூலம் கணினிகளைக் கட்டுப்படுத்தக்கூடிய கருவியை உருவாக்கிவருவதாக மெட்டா நிறுவனர் தெரிவித்துள்ளார்.

Updated On : 22 பிப்ரவரி 2024, 8:27 pm IST
- dotcom
பகிர்:

ஒரு சிறிய கால்குலேட்டர் எப்படி வேலை செய்கிறது என்றே நமக்குத் தெளிவாய் தெரியாது. அப்படி இருக்கையில் காற்றில் எப்படி கற்றைகள் கலந்தது? செய்யறிவுகள் எப்படி இயங்குகின்றன? போன்ற கேள்விகள் முன்னால் நாம் நெருப்பைப் பார்த்து மிரண்ட ஆதிமனிதனாக நிற்கும் நிலையில், தினமொரு அறிவியல் அதிசயம் நிகழ்ந்துகொண்டுதானிருக்கிறது.

அந்த வரிசையில் நம் முன்னால் மேலுமொரு நெருப்பை மெட்டா நிறுவனர் கொடுத்துள்ளார். மனிதனின் மூளையில் ஏற்படும் மிக நுண்ணிய மின் சமிக்ஜைகள் மூலம் கணினியைக் கட்டுப்படுத்தும் கருவி ஒன்றை உருவாக்கிவருவதாக மார்க் சக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.

தனது புதிய கருவியைப் பற்றிய சில தகவல்களைப் பகிர்ந்துள்ள அவர், இந்த கருவி மனிதனின் கை அசைவுகள் மற்றும் மூளை சமிக்ஜைகளை இணைத்து அதன் மூலம் கணினி சாதனங்களைப் பயன்படுத்தலாம் எனக் கூறுகிறார்.

Advertisement

Advertisement

இந்த நரம்பியல் தொழில்நுட்பம் சார்ந்த ஆர்வம் புதிதல்ல. ஏற்கனவே எலான் மஸ்க்கின் நியூரோ லிங்க் எனும் நிறுவனம் இந்த வகையிலான தொழில்நுட்பம் ஒன்றினை மனித மூளையில் பொறுத்தி அதன் மூலம் கணினிகளைப் பயன்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சிகளைச் செய்துவருகிறது.

அதுமட்டுமின்றி சிறிய கணினி சிப்பை, மனிதர் ஒருவரின் மூளையில் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி, சோதனைகளில் வெற்றி கண்டுவருவதாகவும் அது தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மார்க், அறுவை சிகிச்சை ஏதுமின்றி அணிந்துகொள்ளும் கருவியாக இந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதாகவும், இன்னும் 3 வருடங்களுக்குள் தனது புதிய கருவியை விற்பனைக்கு தயார் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments