FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஐ.நா பணியாளர்கள் மீது குற்றச்சாட்டு: நிதியுதவியை நிறுத்திய அமெரிக்கா

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநாவின் முகமை தனது பணியாளர்களில் சிலரை பணிநீக்கம் செய்துள்ளது.

7 பிப்ரவரி 2024, 8:43 pm IST
கான் யூனிஸில் இருந்து ராபாவுக்கு இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் | AP
பகிர்:

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா முகமை தனது பணியாளர்களில் சிலரை பணிநீக்கம் செய்துள்ளது. இஸ்ரேலின் மீதான ஹமாஸின் தாக்குதலில் அவர்கள் பங்குவகித்ததாக எழுப்பப்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமை, காஸாவில் மனிதநேய உதவிகளை அளிப்பதில் முதன்மை வகிக்கிறது. 13 ஆயிரம் பேர் இந்த முகமையில் பணியாற்றுகிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உதவி பணியாளர்கள் என பல்வேறு பணிநிலைகளில் பணியாற்றுபவர்களில் பெரும்பான்மையினர், பாலஸ்தீனர்கள்.

தெயிர் அல்-பலாவில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பலியானவர்களின் உறவினர்கள் | AP

இந்தக் குற்றச்சாட்டை இஸ்ரேல் முன்வைத்தது. முன்னதாக ஐநாவின் பள்ளிகளில் இஸ்ரேலுக்கு எதிரான கருத்துகள் பயிற்றுவிக்கப்படுவதாகவும் அதன் பணியாளர்கள் ஹமாஸுடன் இணைந்து செயல்படுவதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டி வந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஐ.நா சிலரைப் பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிவித்தபோதும் மேலதிக விபரங்களை வெளியிடவில்லை.

தனது பணியாளர்கள் மீதான குற்றச்சாட்டு அதிர்ச்சியளிப்பதாகவும் பயங்கரவாத செயலில் ஈடுப்பட்டிருந்தால் அதற்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் முகமையின் தலைவர் பிலிப் லாஸரினி தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அமெரிக்கா இந்த முகமைக்கான நிதியை நிறுத்தியுள்ளது. மிகப்பெரிய நிதி உதவியாளரான அமெரிக்கா 2022-ல் ஒட்டுமொத்தமாக 34 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு நிதியுதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments