முகப்பு
உலகம்

பஹல்காம் தாக்குதல்: நேபாளத்தில் பாகிஸ்தான் தூதரகம் முன்பு போராட்டம்!

நேபாளத்திலுள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 26 ஏப்ரல் 2025, 2:57 pm IST
கோப்புப் படம்
பகிர்:

பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து நேபாளத்திலுள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரிலுள்ள பஹல்காமில் கடந்த ஏப்.22 ஆம் தேதியன்று சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்தத் தாக்குதலைக் கண்டித்து நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டிலுள்ள பாகிஸ்தானின் தூதரகம் முன்பு நாகாரிக் யுவா சக்தி நேபாள் எனும் அமைப்பைச் சேர்ந்த பலர் இன்று (ஏப்.26) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

இந்தப் போராட்டத்தில் தாக்குதலில் பலியான அந்நாட்டைச் சேர்ந்த சுதீப் நியூபானே (வயது 27) என்பவரின் புகைப்படம் மற்றும் பதாகைகளைக் கையில் ஏந்தி, 'பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும்’, ’ஹிந்துக்களைக் கொல்வதை நிறுத்துங்கள்’ ஆகிய முழக்கங்களை போராட்டக்காரர்கள் எழுப்பியுள்ளனர்.

இத்துடன், அந்நாட்டைச் சேர்ந்த ராஷ்டிரிய பிரஜதந்த்ரா கட்சி சார்பில் இன்று (ஏப்.26) பாகிஸ்தான் தூதரகம் முன்பு மற்றொரு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு: 2 லட்சம் பேர் பங்கேற்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments