மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!
எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி...
எத்தியோப்பியா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் வரவேற்ற அந்நாட்டின் பிரதமர் அபிய் அகமது அலி, அவருக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறைப் பயணமாக, ஜோர்டான் நாட்டுக்கு திங்கள்கிழமை(டிச. 15) சென்றடைந்தார். ஜோர்டான் பயணத்தை முடித்துக்கொண்டு அவர் எத்தியோப்பியா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் வரவேற்ற அந்நாட்டின் பிரதமர் அபிய் அகமது, அவரை காரின் முன்பக்க இருக்கையில் அமரச்செய்ததுடன், விமான நிலையத்திலிருந்து மோடி தங்கியிருக்கும் விடுதி வரை அபிய் அகமதே காரை ஓட்டிச் சென்றார். இது தொடர்பான காணொலிக் காட்சிகளும் புகைப்படங்களும் அதிகம் பகிரப்பட்டு பார்வையாளர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன.
Advertisement
Advertisement
In a special gesture, Ethiopian PM welcomes PM Modi at airport; takes him to Science Museum and Friendship Park, drove Modi to the hotel.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.