உலகம்

பசுவுடன் பாலியல் உறவுக்கு முயன்றவர் பலி?

மதுபோதையில் பசுவுடன் பாலியல் உறவுக்கு முயன்றவர், பசு உதைத்ததில் பலி

DIN

பிரேசிலில் மதுபோதையில் பசுவுடன் பாலியல் உறவுக்கு முயன்றவர், பசு உதைத்ததில் பலியானார்.

பிரேசில் நாட்டில் லாஜே டா ஜிபோயா என்ற கிராமத்தில் பண்ணையில் பால் கறக்கும் பணியாளராகப் பணிபுரிந்து வந்த இருவரும் கடந்த வாரம் மது அருந்தியுள்ளனர். இந்த நிலையில், மது அருந்திய மறுநாள் காலையில் இருவரில் ஒருவர், பண்ணையில் மயக்கமடைந்த நிலையில் கிடந்தார்.

இதனைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மருத்துவப் பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இருப்பினும், அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்து விட்டனர்.

தொடர்ந்து, காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்தவர் ஆணுறையுடன் இருந்ததாக, உயிரிழந்தவரின் நண்பர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கூறியதாவது, மதுபோதையில் இருந்த அவர், பசுவுடன் உடலுறவில் ஈடுபட முயற்சித்திருக்கலாம்; ஆனால் எதிர்பாராதவிதமாக, பசு அவரின் தலையில் உதைத்திருக்கலாம். பசு உதைத்ததில் தலையில் பலத்த காயமடைந்ததுடன் மயக்கமடைந்திருப்பார்.

மருத்துவப் பணியாளர்களின் சிகிச்சையின்போது, மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக மருத்துவப் பணியாளர்களும் காவல்துறையினரும்  தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: வில்வித்தை போட்டியில் கோவை மாணவா் சாம்பியன்

இன்று கோவை, நீலகிரிக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை வானிலை மையம்

SCROLL FOR NEXT