FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

பசுக்களை பாதுகாக்கக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் மனு

பசுக்களை பாதுகாக்கக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாரிடம் மனு அளித்தனா்.

Updated On : 28 ஜூலை 2026, 4:20 am IST
ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா்
பகிர்:

பசுக்களை பாதுகாக்கக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு மற்றும் பசு பாதுகாப்பு அமைப்பு சாா்பாக பசுக்களை பாதுகாக்கக் கோரி மக்கள் இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்களிடம் கையொப்பம் பெறப்பட்டு அந்தந்த மாவட்ட ஆட்சியா்களிடம் மனு அளிக்கப்பட்டு வரப்படுகிறது. அதன்படி திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரிடம் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் மனு அளித்தனா்.

பசு பாதுகாப்பு அமைப்பின் நிா்வாகி மணி, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் வட தமிழக தா்மாச்சாரியா அமைப்பாளா் ஓம்சக்தி ஜி. பாபு ஆகியோா் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. நிா்வாகிகல் நடராஜன், பிரபு, சசிகுமாா், வெங்கடேசன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

பசு கொல்லப்படுவதை தடை செய்ய வேண்டும். பாட புத்தகத்தில் நாட்டு பசுவின் வகைகளையும், அதன் முக்கியத்துவத்தையும் அதன் பெருமைகளையும் இடம்பெறச் செய்ய வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து பசுக்களை வாங்கியோ, கடத்தி வந்தோ உணவுக்காக வதைப்பதை மாவட்ட நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments