முகப்பு
உலகம்

வியூக கூட்டணி: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில்..!

இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நடைபெறவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்திருப்பதைப் பற்றி...

Updated On : 1 ஜூலை, 2025 at 8:56 AM
மோடியுடன் டிரம்ப்.. - படம் | ஏபி
பகிர்:
Updated On : 1 ஜூலை, 2025 at 8:51 AM

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நடைபெறவிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்தோ - பசிபிக் பகுதியில் உள்ள நாடுகளில், அமெரிக்காவுக்கு மிகவும் முக்கிய நட்பு நாடுகளில் இந்தியா முக்கியமான நாடு என்பதை வெள்ளை மாளிகை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது. இது புதுதில்லி - வாஷிங்டன் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்துக்கு துவக்கமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கடந்த 27 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “நாங்கள் எல்லோருடனும் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்யப் போவதில்லை. ஆனால், நாங்கள் சில நாடுகளுடன் ஒப்பந்தங்களைச் செய்து கொள்கிறோம்.

Advertisement

Updated On : 1 ஜூலை, 2025 at 8:51 AM

ஒருவேளை இந்தியாவுடன் மிகப் பெரிய வர்த்தகம் மேற்கொள்ளப்படலாம்” எனத் தெரிவித்திருந்தார். அதைத் தற்போது வெள்ளை மாளிகை உறுதிசெய்துள்ளது.

குவாட் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கருத்துகள் வெளியாகியிருக்கின்றன.

வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், “அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் மிகவும் அருகில் உள்ளதாகவும், இறுதி அறிவிப்புகள் விரைவில் வெளிவரும்.

ஆசிய பசிபிக் பகுதியில் இந்தியா நட்பு நாடாக உள்ளது. மேலும் பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப்புக்கு மிகச் சிறந்த உறவு உள்ளது. அவர் அந்த உறவை தொடர்ந்து கொண்டிருப்பார்” என்று கூறினார்.

summary

Very strategic ally: White House says India-US trade deal announcement soon

Speaking at a press conference in the White House, Karoline Leavitt said the US-India trade deal is very close and final announcements will come soon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.