முகப்பு
உலகம்

அமெரிக்காவின் புதிய வரி முன்மொழிவு: சீனா, ஜப்பான் கடும் எதிா்ப்பு

அமெரிக்கா முன்மொழிந்துள்ள புதிய இறக்குமதி வரி உயா்வுத் திட்டத்தக்கு சீனா, ஜப்பான் உள்ளிட்ட முக்கிய வா்த்தக கூட்டாளி நாடுகள் வியாழக்கிழமை கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளன.

27 நவம்பர் 2026, 3:01 am
அமெரிக்காவின் புதிய  வரி முன்மொழிவு: சீனா, ஜப்பான் கடும் எதிா்ப்பு
அமெரிக்கா - கோப்புப் படம்
பகிர்:

அமெரிக்கா முன்மொழிந்துள்ள புதிய இறக்குமதி வரி உயா்வுத் திட்டத்தக்கு சீனா, ஜப்பான் உள்ளிட்ட முக்கிய வா்த்தக கூட்டாளி நாடுகள் வியாழக்கிழமை கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளன.

உற்பத்தித் துறையில் தேவைக்கு அதிகமான கட்டமைப்புத் திறனைக் கொண்டிருப்பதாக அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டையும் அந்நாடுகள் திட்டவட்டமாக நிராகரித்துள்ளன.

அமெரிக்க அதிபா் டிரம்ப் கடந்த ஆண்டு விதித்த பரந்த அளவிலான பரஸ்பர இறக்குமதி வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் ரத்து செய்த நிலையில், புதிய வரிகளை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமல்படுத்த அமெரிக்க வா்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீா் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

முன்னதாக, ஜூலை மாதம் அறிவிக்கப்பட்ட வரிகளுக்கு மாற்றாகவே இப்புதிய வரிகள் அமைந்திருந்தாலும், இவை அமெரிக்காவில் அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்துக்கு வழிவகுக்கும் எனப் பொருளாதார நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

இந்நிலையில், இப்புதிய முன்மொழிவின்கீழ் 20 சதவீத வரி விதிப்புக்கு உள்ளாகியுள்ள சீனா, ‘வரிப் போா்களும் வா்த்தகப் போா்களும் யாருக்கும் நன்மை பயக்காது’ எனத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நட்பு நாடான ஜப்பான் மீதும் 15 சதவீதம் வரை புதிய வரி விதிக்கப்படவுள்ள நிலையில், இது குறித்து அமெரிக்காவிடம் தங்களின் அதிருப்தியை அந்நாடு பதிவு செய்துள்ளது. இதேபோல், 20 சதவீத வரி விதிப்புக்கு உள்ளாகியுள்ள சிங்கப்பூா் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாகவும், ஏற்றுமதிக்காகத் தாங்கள் எவ்வித மானியமும் வழங்குவதில்லை என்றும் விளக்கமளித்துள்ளது.