FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

செம்மணி: தோண்டியெடுக்கப்பட்ட 65 சிறுமிகளின் எலும்புகள்! யார் இவர்கள்?

இலங்கையின் செம்மணி பகுதியில் தோண்டியெடுக்கப்பட்ட 65 சிறுமிகளின் எலும்புகள் பற்றி..

Updated On : 18 ஜூலை 2025, 1:48 pm IST
செம்மணி புதைகுழி - DPS
பகிர்:

இலங்கை நாட்டின், கொழும்புவில் உள்ள செம்மணி பகுதியிலுள்ள புதைகுழியில் இருந்து 4 முதல் 5 வயதிலான 65 சிறுமிகளின் எலும்புக் கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள் யார்? பள்ளிச் சிறுமிகளா? பெற்றோரிடமிருந்து பிரித்து தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வடக்கு யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் அண்மையில் ஏராளமான மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன. முன்னதாக, கடந்த 1998-ஆம் ஆண்டிலும் செம்மணி பகுதியில் ஏராளமானோா் கொன்று புதைக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. தொடா்ந்து அங்கு நடத்தப்பட்ட அகழாய்வில் 15 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

தற்போது, மீண்டும் அந்தப் பகுதியிலிருந்து எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பல எலும்புகளுடன் பள்ளிப் பைகள், பொம்மைகளும் இருந்ததாக நேரில் பார்த்த அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

Advertisement

Advertisement

1990-களின் மத்தியில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான போரின்போது கொல்லப்பட்டவா்கள் செம்மணி புதைகுழியில் புதைக்கப்பட்டிருப்பதாக கடந்த 1998-இல் வெளி உலகுக்குத் தெரியவந்தது.

அப்போது அங்கிருந்து 15 எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டன. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதன்பிறகு தற்போது அப்பகுதியில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டபோது, மேலும் சில மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரித்த யாழ்ப்பாணம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தை ‘மனிதப் புதைகுழி’ என அதிகாரபூா்வமாக அறிவித்ததோடு, நீதிமன்றக் கண்காணிப்பில் அகழாய்வு நடத்தவும் உத்தரவிட்டது. இந்நிலையில்தான், 4 - 5 வயதுடைய 65 சிறுமிகளின் எலும்புக்கூடுகள், பள்ளிப்பை, பொம்மைகளுடன் மீட்கப்பட்டுள்ளன.

இலங்கையிலிருக்கும் பத்துக்கும் மேற்பட்ட புதைகுழிகளில் ஒன்றாகத்தான் செம்மணி புதைகுழி இருக்கிறது. 2009ஆம் ஆண்டு முடிவுபெற்ற, 26 ஆண்டகால தமிழீழ போரின்போது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல ஆயிரம் பேர் மாயமாகினர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 10) முடிந்த தோண்டியெடுக்கும் பணிகள் ஜூலை 21ஆம் தேதி மீண்டும் தொடங்கவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments