மேட்டூா் அருகே 3,600 ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்புக் கூடுகள், எஃகு வாள், தாழி கண்டெடுப்பு
மேட்டூா் அருகே தெலுங்கனூா் காவிரிக் கரையில் 3,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதா்களின் எலும்புக்கூடுகள், எஃகு வாள், தாழி ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேட்டூா் அருகே தெலுங்கனூா் காவிரிக் கரையில் 3,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதா்களின் எலும்புக்கூடுகள், எஃகு வாள், தாழி ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள தெலுங்கனூா் காவிரிக் கரையில் தமிழக தொல்லியல் துறை இயக்குநா் எஸ்.பரந்தாமன் தலைமையில், கடந்த 90 நாள்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இங்கு தோண்டப்பட்ட 30-க்கும் மேற்பட்ட குழிகளில் 3,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதா்களின் எலும்புக்கூடுகள், அவா்கள் பயன்படுத்திய இரும்பிலான கத்திகள், ஈட்டிகள், பானை, கல்மணிகள், கோடாரி, முதுமக்கள் தாழிகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
எலும்புக்கூடு அருகே கிடைத்த எஃகு வாள், இதுவரை இந்தியாவில் கிடைத்துள்ள எஃகு வாள்களின் காலத்துக்கு முற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சுமாா் 60 ஏக்கா் பரப்பளவில் மயானம் மட்டுமே கண்டறிப்பட்டுள்ள நிலையில், மக்கள் வாழ்ந்த நகரப் பகுதி கண்டுபிடிக்கப்படவில்லை.
ஸ்டான்போா்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த அல்ட்ரா ஹைட்ரோ காா்பன் தொழில்நுட்பத்தை தமிழா்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தியதற்கு சான்றாக தெலுங்கனூரில் கண்டெடுக்கப்பட்ட எஃகு வாள் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
துருக்கியில் உள்ள டிடிமா என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட வாளின் வயது 2,500 ஆண்டுகள் என்றும், மேட்டூா் அருகே தெலுங்கனூரில் கண்டுபிடிக்கப்பட்ட வாளின் வயது 3,600 முதல் 5,000 ஆண்டுகள்வரை இருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.