FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஜிடிஏ 6 விடியோ கேம் வெளியீடு! நீண்டகால காத்திருப்புக்கு முடிவு!

ஜிடிஏ 6 வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Updated On : 2 மே 2025, 8:42 pm IST
பகிர்:

ஜிடிஏ 6 கேமின் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்தின் கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ கேமின் (Grand Theft Auto) 6-வது பதிப்பின் வெளியீட்டுத் தேதியை, அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் வெளியிடப்படும் என்று அந்நிறுவனம் 2013 ஆம் ஆண்டிலேயே அறிவித்திருந்தது.

இருப்பினும், ஒவ்வோர் ஆண்டும் ஜிடிஏ 6-க்காக அதன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இதனிடையே, 2025 ஆம் ஆண்டில் வெளியிடப்படுவதாய் இருந்த நிலையில், அடுத்தாண்டு மே மாதம் 26 ஆம் தேதியில்தான் ஜிடிஏ 6 வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இதுகுறித்து, ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் தெரிவித்ததாவது, ``ஜிடிஏ 6-ன் அறிவிக்கப்பட்ட தேதியைவிட தாமதமாக வெளியிடப்படுவதற்கு வருந்துகிறோம். ஜிடிஏ 6-ஐ உருவாக்கும்வரையில் ஆதரவு தெரிவித்ததற்கும், பொறுமை காத்ததற்கும் நன்றி.

ராக்ஸ்டாரின் ஒவ்வொரு விளையாட்டிலும், உங்கள் எதிர்பார்ப்பைக் காட்டிலும் அதிகமாகத் தருவது மட்டுமே எங்கள் குறிக்கோள். அதற்கு ஜிடிஏ 6-யும் விதிவிலக்கல்ல.

ஆகையால், விளையாட்டின் தரத்தை மேம்படுத்த எங்களுக்கு கூடுதல் நேரம் தேவை. மேற்பட்ட தகவல்களும் தொடர்ந்து பகிரப்படும்’’ என்று கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments