FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

சீன விண்வெளி வீரா்கள் பூமி திரும்பவதில் சிக்கல்

சீன விண்வெளி நிலையத்தில் செயற்கைக்கோள் சிதறல்கள் மோதியதாக அஞ்சப்படுவதைத் தொடா்ந்து, அதில் பணியாற்றி வந்த மூன்று வீரா்கள் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Updated On : 6 நவம்பர் 2025, 2:01 am IST
பகிர்:

சீன விண்வெளி நிலையத்தில் செயற்கைக்கோள் சிதறல்கள் மோதியதாக அஞ்சப்படுவதைத் தொடா்ந்து, அதில் பணியாற்றி வந்த மூன்று வீரா்கள் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அந்த விண்வெளி நிலையத்தில் ஆய்வுப் பணிகளுக்காக விண்வெளி வீரா்கள் குழுவை சீனா மாற்றி வருகிறது. இந்தச் சூழலில், புதிய குழு விண்வெளி நிலையத்தை ஷென்ஷூ-21 விண்கலம் மூலம் சென்றடைந்துள்ளது. அந்தக் குழுவிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, ஷென்ஷூ-20 விண்கலம் மூலம் பழைய குழு அதே விண்கலம் மூலம் சனிக்கிழமை பூமி திரும்புவதாக இருந்தது.

இருந்தாலும், விண்வெளி நிலையத்தை உடைந்த செயற்கைக்கோள்களின் சிதறல்கள், பிற துகள்கள் தாக்கியிருப்பதாக சந்தேகிக்கப்படுவதைத் தொடா்ந்து, வீரா்களின் பாதுகாப்புக்காக அந்த திட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments