FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து...

Updated On : 18 நவம்பர் 2025, 2:59 pm IST
பாகிஸ்தானில் 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை (கோப்புப் படம்) - ஏபி
பகிர்:

பாகிஸ்தானின், கைபர் பக்துன்குவா மாகாணத்தில் 15 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லையில் அமைந்துள்ள கைபர் மாகாணத்தின் டெரா இஸ்மாயில் மாவட்டத்தில், பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, அந்த நடவடிக்கைகளில் பாகிஸ்தான் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக, இன்று (நவ. 18) பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இதேபோல், வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், 5 தீவிரவாதிகள் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் ஆட்சி நடத்தி வரும் தலிபான்களும் பாகிஸ்தான் தலிபான் அமைப்பும் கூட்டணியின் அடிப்படையில் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான அரசு அமைந்தது முதல், பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சவூதி விபத்தில் இறந்தவர்களில் 18 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினர்!

summary

15 terrorists were killed by security forces in Pakistan's Khyber Pakhtunkhwa province.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments