FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் 8 பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்றதாக தெரிவித்தது குறித்து...

பாதுகாப்புப் படையினர் - கோப்புப் படம்
பகிர்:

வடமேற்கு பாகிஸ்தானில், பாதுகாப்புப் படையினர் 8 பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்றதாக அந்நாட்டு ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்தது.

ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில், ஐஎஸ்பிஆரின் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் எட்டு தீவிரவாதிகளை பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் கொன்றதாக, அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது.

புதன்கிழமையன்று அப்பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் பற்றி கிடைத்த தகவல்களையடுத்து, பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், சம்பவ இடத்திலிருந்து ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படைகள் தீவிரவாதிகளுடன் திறம்பட மோதி, எட்டு பயங்கரவாதிகளைக் கொன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் இடைக்கால தலிபான் அரசாங்கம் எல்லை நிர்வாகத்தை உறுதி செய்யத் தவறிவிட்டது என்று கூறிய அந்த அறிக்கை, பாகிஸ்தான் தனது வருத்தத்தை மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது.

summary

In northwestern Pakistan, security forces shot dead eight terrorists, the country's army stated on Thursday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments