மதுரோவின் கடத்தலுக்குப் பிறகு! முதல்முறையாக வெனிசுவேலா சென்றார் கொலம்பியா அதிபர்!
கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோ வெனிசுவேலா நாட்டுக்குச் சென்றுள்ளது குறித்து...
கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோ அரசு முறைப் பயணமாக வெனிசுவேலா நாட்டுக்குச் சென்றுள்ளார்.
வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரின் மனைவி ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவின்படி அமெரிக்க படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்.
இந்த நிலையில், கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோ கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 24) அரசு முறைப் பயணமாக வெனிசுவேலா தலைநகர் கராகஸுக்குச் சென்றடைந்தார். அதிபர் மதுரோவின் கடத்தலுக்குப் பிறகு வெளிநாட்டு தலைவர் ஒருவர் வெனிசுவேலா வருவது இதுவே முதல்முறையாகும்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, வெனிசுவேலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸை நேரில் சந்தித்த அதிபர் பெட்ரோ, புலம்பெயர்வு, எல்லைப் பாதுகாப்பு, தொழிற்சாலை ஒத்துழைப்பு மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இத்துடன், வெனிசுவேலா எல்லையில் அமைந்துள்ள கொலம்பியாவின் கட்டடும்போப் பகுதியில் நடைபெற்று வரும் ஆயுதக்குழுவினரின் தாக்குதல்கள் குறித்த உரையாடல்கள் இந்த நிகழ்வில் நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, அதிபர் பெட்ரோ மற்றும் ரோட்ரிக்ஸ் ஆகியோர் கடந்த மாதம் இருநாட்டு எல்லையில் சந்திக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், இறுதிநேரத்தில் அந்தச் சந்திப்பு அந்நாட்டு அரசுகளால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Colombian President Gustavo Petro has traveled to Venezuela on a state visit.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.