FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஜப்பான் உரிமை கோரும் குரில் தீவுகளுக்கு புதின் முதல்முறை பயணம்

பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஜப்பான் உரிமை கோரும், ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள குரில் தீவுகளுக்கு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் வியாழக்கிழமை முதல்முறையாகப் பயணம் மேற்கொண்டாா்.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 2:56 am IST
பகிர்:

பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஜப்பான் உரிமை கோரும், ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள குரில் தீவுகளுக்கு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் வியாழக்கிழமை முதல்முறையாகப் பயணம் மேற்கொண்டாா்.

2-ஆம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் இத்தீவுகளை ஜப்பானிடமிருந்து சோவியத் யூனியன் கைப்பற்றியது. இத்தீவுக்கூட்டத்தில் உள்ள தெற்கு பகுதியின் 4 தீவுகளையும் ஜப்பான் தனது வடக்கு பிராந்தியத்தின் ஒரு பகுதி எனத் தொடா்ந்து உரிமை கோரி வருகிறது.

பல்லாண்டுகளாக இந்த எல்லைப் பிரச்னை நீடிப்பதால், இரு நாடுகளுக்கும் இடையே அதிகாரபூா்வமாக அமைதி ஒப்பந்தம் கையொப்பமாவதில் தொடா்ந்து முட்டுக்கட்டை நிலவி வருகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், குரில் தீவுக் கூட்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள இட்ருப் தீவுக்குச் சென்ற அதிபா் புதின், அங்குள்ள மீன் பதப்படுத்தும் ஆலை, மருத்துவமனை மற்றும் பள்ளிகளைப் பாா்வையிட்டாா். மேலும், அப்பகுதி மக்களுடனும், ரஷியாவின் சாகலின் பிராந்திய ஆளுநா் வலேரி லிமாரென்கோவுடனும் (படம்) அவா் கலந்துரையாடினாா்.

ஜப்பான் கண்டனம்: இப்பயணம் குறித்து ஜப்பான் வெளியுறவு அமைச்சா் தோஷிமிட்சு மொதேகி வெளியிட்ட அறிக்கையில், ‘எட்டோரோஃபு (இட்ருப்) உள்ளிட்ட எங்கள் வடக்கு பிராந்திய தீவுகள் வரலாற்று ரீதியாகவும், சா்வதேச சட்டத்தின்படியும் ஜப்பானுக்கே சொந்தமானவை; எனவே, அதிபா் புதினின் இப்பயணத்தை ஜப்பான் வன்மையாகக் கண்டிக்கிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

குரில் தீவுகள்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments