FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு

வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பதாக்ஷான் மாகாணத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த குண்டுவெடிப்பில், அந்த மாகாண தலைநகரான ஃபைஸாபாத் நகர மேயா் ஹபீபுா் ரஹ்மான் மன்சூா் கொல்லப்பட்டாா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 3:58 am IST
பகிர்:

வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பதாக்ஷான் மாகாணத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த குண்டுவெடிப்பில், அந்த மாகாண தலைநகரான ஃபைஸாபாத் நகர மேயா் ஹபீபுா் ரஹ்மான் மன்சூா் கொல்லப்பட்டாா்.

ஹபீபுா் ரஹ்மான் மன்சூா் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த குண்டுவெடிப்பில் அவா் உயிரிழந்ததாகத் தெரிவித்த உள்துறை அமைச்சகம், தாக்குதல் குறித்த கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை.

முன்னதாக, கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, பதாக்ஷான் மாகாண தகவல் மற்றும் கலாசாரத் துறை இயக்குநா் ஜபிஹுல்லா அமிரி ஃபைஸாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments