FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு அல்-கொய்தாவே காரணம்! ஐ.நா. அறிவிப்பு

தில்லியில் செங்கோட்டை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு அல்-கொய்தா அமைப்பே காரணம் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூறியது பற்றி...

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 9:47 am IST
தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு
பகிர்:

தில்லியில் செங்கோட்டை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு அல்-கொய்தா அமைப்பே காரணம் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.

தில்லியில் கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 11 பேர் பலியாகினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, 11 குற்றவாளிகளுக்கு எதிராக 7,500 குற்றப்பத்திரிகையை தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்துள்ளது. இந்தக் குற்றப்பத்திரிகையை ஆக. 27-ல் ரவுஸ் அவென்யூ நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. மேலும், அரசு தரப்பின் புகார் மனு, ஆயிரக்கணக்கான பக்கங்களுடன் இருப்பதுடன், 580-க்கும் மேற்பட்ட சாட்சிகளையும் மேற்கோள் காட்டியுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு அல்-கொய்தா அமைப்பே காரணம் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதாக ஐ.நா. பகுப்பாய்வு ஆதரவு மற்றும் தடைகள் கண்காணிப்புக் குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, வங்கதேசத்திலும் தங்களின் குழுக்களை நிறுவுவதற்காக அந்நாட்டையும் அல்-கொய்தா சுரண்டுவதாகவும் ஐ.நா. கூறியுள்ளது.

summary

UNSC report links Al-Qaida in Indian Subcontinent to November 2025 Red Fort blast

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments