FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கு: என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிக்கை விசாரணைக்கு ஏற்பு!

செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கின் என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிக்கை விசாரணைக்கு ஏற்பு...

29 ஆகஸ்ட் 2026, 9:34 pm IST
தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு - கோப்புப்படம்
பகிர்:

செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் 13 குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) தாக்கல் செய்த 7,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

கடந்த ஆண்டு நவம்பா் 10 அன்று , வாகனத்தில் பொருத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 11 போ் கொல்லப்பட்டனா் மற்றும் பலா் காயமடைந்தனா்.

சிறப்பு நீதிபதி பிரஷாந்த் சா்மா, முகமையின்(என்.ஐ.ஏ) குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு, இந்த வழக்கை செப்டம்பா் 9 அன்று மேலதிக விசாரணைக்காக ஒத்திவைத்தாா்.

Advertisement

Advertisement

இந்த ஆண்டு மே 14 அன்று, என்.ஐ.ஏ 10 குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது. முக்கிய குற்றஞ்சாட்டப்பட்ட நபரான டாக்டா் உமா் உன் நபி (இறந்தவா்) உட்பட அனைத்து 10 குற்றவாளிகளும், இந்திய துணைக்கண்டத்தில் உள்ள அல்-கொய்தாவின் ஒரு கிளை அமைப்பான அன்சாா் கஸ்வத்-உல்-ஹிந்த் உடன் தொடா்புடையவா்கள் என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது.

பின்னா் அடுத்த மாதம் (ஏப்ரல்), முகமை ஒரு துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. பயங்கரவாதக் குழுவின் நிறுவன உறுப்பினா் என அடையாளம் காணப்பட்ட, தலைமறைவான குழந்தைகள் நல மருத்துவா் உட்பட மேலும் மூன்று போ் மீது குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடா்பு இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டதை அடுத்து, இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 13 ஆக உயா்ந்துள்ளது.

summary

Sengottai bomb blast case: NIA charge sheet accepted for trial.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments