பாலஸ்தீனத்தில் பன்நோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டிக் கொடுக்கும் இந்தியா!
பாலஸ்தீனத்தில் இந்தியா கட்டிக் கொடுக்கும் பன்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு அடிக்கல்...
பாலஸ்தீனத்தில், இந்தியா கட்டிக் கொடுக்கும் பன்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றுள்ளது.
இந்தியா மற்றும் பாலஸ்தீனம் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக, 200 படுக்கைகளைக் கொண்ட பன்நோக்கு சிறப்பு மருத்துவமனையைக் கட்டிக்கொடுப்பதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்தியா கட்டிக்கொடுக்கும் பன்நோக்கு சிறப்பு மருத்துவமனையின் அடிக்கல் நாட்டும் விழா இன்று (ஆக. 19) பாலஸ்தீனத்தின் ரமல்லா மற்றும் ஜெனின் நகரங்களில் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிகழ்வில், பாலஸ்தீனத்துக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறச் செயலர் ஸ்ரீபிரியா ரங்கநாதன் மற்றும் பாலஸ்தீன பிரதமர் முகமது முஸ்தஃபா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து, இந்தியா மற்றும் பாலஸ்தீனம் இடையே அவசர சிகிச்சை மையம் உள்ளிட்டவை அடங்கிய மருத்துவமனைத் திட்டம் உள்பட 2 வெவ்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மேலும், பாலஸ்தீனத்தின் சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையின் மேம்பாட்டிற்கு இந்திய அரசு தொடர்ந்து உதவி செய்யும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் போரில் காஸா, மேற்கு கரை உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகளின்றி மக்கள் அகதிகள் முகாம்களில் வசித்து வருகின்றனர். மேலும், இஸ்ரேலின் தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உள்பட 78,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The foundation stone-laying ceremony for a multi-specialty hospital being built by India in Palestine has taken place.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.