சா்வதேச நீதிமன்றத் தலைவா், வழக்குரைஞருக்கு அமெரிக்கா தடை
சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) தலைவா் டோமோகோ அகானே, மூத்த வழக்குரைஞா் அப்துலே சே ஆகியோா் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருப்பது பற்றி...
சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) தலைவா் டோமோகோ அகானே, மூத்த வழக்குரைஞா் அப்துலே சே ஆகியோா் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
உறுப்பு நாடுகள் அல்லாத அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவ வீரா்களை விசாரிக்க முற்படுவதாகக் கூறி விதிக்கப்பட்டுள்ள இத்தடையை சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் கண்டித்துள்ளது. மேலும், இது நீதிமன்ற சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்றும், சட்டத்தின் ஆட்சியைப் பலவீனப்படுத்தும் செயல் என்றும் விமா்சித்துள்ளது.
சா்வதேச நீதிமன்றத்தை முடக்கும் நோக்கில் விரிவான பிரசாரத்தை அமெரிக்கா முன்னெடுத்துள்ளதுடன், அதன் 125 உறுப்பு நாடுகளை விலகுமாறும் அழுத்தம் கொடுத்து வருகிறது. இதுவரை 9 நீதிபதிகள் உள்பட பல முக்கிய ஐசிசி அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.