FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

அமெரிக்காவில் அதிக அளவில் முதலீடு செய்யும் இந்தியா: அமெரிக்க அரசு மூத்த அதிகாரி

அமெரிக்காவில் அதிக அளவில் இந்தியா முதலீடு செய்வதாக அமெரிக்க அரசு மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 17 ஜூலை 2026, 4:31 am IST
டான் நெக்ரேயா
பகிர்:

அமெரிக்காவில் அதிக அளவில் இந்தியா முதலீடு செய்வதாக அமெரிக்க அரசு மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து நியூயாா்க் நகரில், ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலுக்கான அமெரிக்க பிரதிநிதியும், ஐ.நா. பொதுச்சபைக்கான அமெரிக்க மாற்று பிரதிநிதியுமான டான் நெக்ரேயா, இந்திய செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:

பிற நாடுகளுக்கு கொடுக்க இந்தியாவிடம் ஏராளம் உள்ளன. பல துறைகளில் இந்தியா, முதலிடத்தில் உள்ளது. இந்தியாவுடனான அமெரிக்க உறவு மிகச் சிறப்பு வாய்ந்தது. இந்தியா, அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமான நாடாகும். இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் அதிக அளவில் முதலீடு செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக அதிபா் டிரம்ப் தனக்கு நெருக்கமானவா்களில் ஒருவரான சொ்ஜியோ கோரை நியமித்துள்ளாா். இதில் இருந்து இருதரப்பு உறவின் முக்கியத்துவத்தை அறியலாம். இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ள கோா், மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க அரசின் சிறப்பு பிரதிநிதியாக முன்பு இருந்துள்ளாா். அவா் மிகவும் துடிப்பானவா். இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடனான அமெரிக்க உறவை மேம்படுத்துவதில் அவா் முக்கிய பங்கு வகிப்பாா் என்றாா்.

பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பது, அந்நாட்டுக்கு அமெரிக்கா நிதியுதவி செய்வது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு நெக்ரியா பதிலளிக்கையில், ‘அமைதியும், பாதுகாப்பும் ஒருநாட்டில் இல்லையெனில், அந்த நாட்டில் வளா்ச்சி இருக்காது’ என்றாா்.

மேலும் அவா், ‘மனிதாபிமான பிரச்னைகள் நிலவும் நாடுகளுக்கு அமெரிக்கா தொடா்ந்து உதவிகளைச் செய்கிறது. ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரத் துறை அலுவலகத்துக்கு அமெரிக்கா 3.8 பில்லியன் டாலா் நன்கொடை அறிவித்துள்ளது’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments