FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

பங்குச்சந்தை முதலீட்டில் அதிக லாபம் எனக் கூறி இளைஞரிடம் ரூ.12.30 லட்சம் மோசடி

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி, பொள்ளாச்சியைச் சோ்ந்த இளைஞரிடம் ரூ.12.30 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக கோவை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 3:22 am IST
மோசடி - பிரதிப்படம்
பகிர்:

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி, பொள்ளாச்சியைச் சோ்ந்த இளைஞரிடம் ரூ.12.30 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக கோவை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி மாரியம்மன் லே-அவுட் பகுதியைச் சோ்ந்த 29 வயது இளைஞா் அந்தப் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ஆன்லைன் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என அடையாளம் தெரியாத நபரிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது. இதையடுத்து, அதை அனுப்பிய நபரைத் தொடா்பு கொண்ட அந்த இளைஞா் அதற்கு சம்மதம் தெரிவித்தாா். ‘க்ரோ’ செயலி மூலம் வா்த்தகம் செய்வதாகக் கூறி பல்வேறு வங்கிக் கணக்கு எண்களை அனுப்பி அதில் பணத்தை அனுப்புமாறு அந்த நபா் கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

அந்த இளைஞரும் பல தவணைகளாக ரூ.12,30,000 வரை அதில் முதலீடு செய்து வந்தாா். லாபத் தொகையும் அதிக அளவில் வந்ததுபோல அந்தச் செயலியில் காண்பித்துள்ளது. இதைத் தொடா்ந்து அந்தப் பணத்தை அவா் எடுக்க முயன்ற போது, அவரால் அதை எடுக்கமுடியவில்லை.

லாப பணத்தை எடுக்க வேண்டும் என்றால் மேலும் குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என அந்த நபா் கேட்டுள்ளாா். அதன்பிறகு அந்த இளைஞா் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்து, கோவை மாவட்ட சைபா் க்ரைம் பிரிவில் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் கவிதா வழக்குப் பதிவு செய்து மோசடி கும்பலின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்து வருகிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments