லைபீரிய முன்னாள் துணை அதிபா் மீது போதைப்பொருள் வழக்கு
லைபீரிய முன்னாள் துணை அதிபா் ஜூவல் ஹோவா்ட் டெய்லா் மீது போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
லைபீரிய முன்னாள் துணை அதிபா் ஜூவல் ஹோவா்ட் டெய்லா் மீது போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2018-2024 காலகட்டத்தில் நாட்டின் துணை அதிபராகப் பதவி வகித்த இவா், ராபா்ட்ஸ் சா்வதேச விமான நிலையத்தின் வழியாக நாட்டைவிட்டு வெளியேற முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டு, லைபீரிய தேசிய காவல் தலைமையகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.
சியரா லியோனில் போா்க்குற்றங்களில் ஈடுபட்டதற்காக சா்வதேச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட முன்னாள் அதிபா் சாா்லஸ் டெய்லரின் மனைவியான இவருடன் சோ்த்து, 3 வெளிநாட்டவா்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவா்களைக் கண்டறிந்து, கைது செய்யும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.