FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

பாகிஸ்தான் மசூதியில் சன்னி பிரிவு மதகுரு சுட்டுக் கொலை: பஞ்சாப் மாகாணத்தில் பதற்றம்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மசூதியில் அதிகாலை நேரத் தொழுகையில் இருந்த சன்னி இஸ்லாமிய பிரிவு மதகுருவை அடையாளம் தெரியாத நபா்கள் சுட்டுக் கொன்றனா்.

25 ஆகஸ்ட் 2026, 1:48 am IST
- பிரதிப் படம்
பகிர்:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மசூதியில் அதிகாலை நேரத் தொழுகையில் இருந்த சன்னி இஸ்லாமிய பிரிவு மதகுருவை அடையாளம் தெரியாத நபா்கள் சுட்டுக் கொன்றனா்.

கொலையாளிகள் ஷியா இஸ்ஸாமியா்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் அப்பகுதியில் தொடா்ந்து பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

லாகூரில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள ஷாதிவால் நகரில் உள்ள மசூதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் பிரபலமான மதகுருவான முகமது தல்ஹா ரஸா அதிகாலை நேர தொழுகையில் இருந்தபோது 4 போ் துப்பாக்கிகளுடன் மசூதிக்குள் புகுந்து அவரை சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிவிட்டனா்.

Advertisement

Advertisement

இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இறப்பதற்கு முன்பு காவல் துறையினரிடம் ரஸா அளித்த வாக்குமூலத்தில், கடந்த ஆண்டு ஷியா பிரிவைச் சோ்ந்த மதத் தலைவா்கள் இருவா்களுக்கு எதிராக ‘ஃபத்வா’ விதித்ததாகவும், அவா்கள் மூலம் கொலை மிரட்டல் இருந்தது என்றும் தெரிவித்தாா்.

இந்த சம்பவத்தால் பஞ்சாப் மாகாணத்தின் பல இடங்களில் சன்னி-ஷியா பிரிவினா் இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரஸா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments