அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரானின் பணமதிப்பு 20 லட்சம் ரியால்கள்! என்னென்ன வாங்க முடியும்?
ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரானின் பணமதிப்பு 20 லட்சம் ரியால்களாக வீழ்ச்சி...
அமெரிக்காவின் ஒரு டாலருக்கு நிகரான ஈரானின் பணமதிப்பு 20 லட்சம் ரியால்களாக வீழ்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்காவின் போருக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகளைத் தாக்கியும், சர்வதேச எரிபொருள் விநியோகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை முடக்கியும் ஈரானிய படைகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதையடுத்து, ஏற்கெனவே பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியுள்ள ஈரானின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளார். இதனால், 92 கோடி மக்கள் வாழும் ஈரானில் அத்தியாவசிய பொருள்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சர்வதேச சந்தையில் தொடர் வீழ்ச்சியாக அமெரிக்காவின் ஒரு டாலருக்கு நிகரான ஈரானின் பணமதிப்பு 20,21,950 ரியால்களாக வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 லட்சம் என்பது எண்ணிக்கையில் அதிகமாகத் தெரிந்தாலும், மதிப்பிழப்பால் அதைக் கொண்டு ஈரானில் அத்தியாவசிய பொருள்களைக் கூட வாங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
ஈரானில் போருக்கு முன்பு 20 லட்சம் ரியால்கள் மூலம், 4 கிலோ தக்காளி, அரை கிலோ கோழி இறைச்சி (சிக்கன்) மற்றும் 1 லிட்டருக்கும் குறைவான சமையல் எண்ணெய் ஆகியவற்றை வாங்க முடியும் எனக் கூறப்படுகிறது.
ஆனால், போருக்குப் பிந்தைய காலத்தில், இன்று தக்காளி விலை 81 சதவிகிதமும், கோழி இறைச்சி 74 சதவிகிதமும், சமையல் எண்ணெய்யின் விலை 177 சதவிகிதமும் அதிகரித்துள்ளதால், 20 லட்சம் ரியால்களாலும் ஈரானின் சாமானிய குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலை உருவாகியுள்ளது.
It has been reported that the value of Iran's currency has fallen to 2 million rials against the US dollar.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.