FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

2 மணி நேரம் மட்டும், இரவில் முழு தடை! இன்ஸ்டா பயன்படுத்த புதிய கட்டுப்பாடு!

ஒரு நாளைக்கு 2 மணி நேரம்தான், இரவில் முழு தடை என இன்ஸ்டா பயன்படுத்த சிறார்களுக்கு புதிய கட்டுப்பாடு பற்றி...

பேஸ்புக், இன்ஸ்டா பயன்படுத்த கட்டுப்பாடு
பகிர்:

குழந்தைகள் மற்றும் சிறார்கள், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளப் பக்கங்களைப் பயன்படுத்த புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வர அமெரிக்க நீதிமன்றத்தில் மெட்டா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

சிறார்கள் அதிக நேரம் சமூக வலைத்தளப் பக்கங்களில் நேரத்தை செலவிடுவதால் ஏற்படும் மிகப்பெரிய அச்சுறுத்தல்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பதினெட்டு வயதுக்குக் குறைவானவர்கள் பேஸ்புக், இன்ஸ்டாவை ஒரு நாளைக்கு அதிகபட்சம் 2 மணி நேரம்தான் பார்க்க முடியும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகிறது.

Advertisement

Advertisement

அதுமட்டுமல்லாமல், நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை இவ்விரண்டு சமூக வலைத்தளங்களையும் சிறார்கள் பார்க்கவே முடியாமல் தடை விதிக்கப்படவிருக்கிறது. இந்தத் தீர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மெட்டா நிறுவனம், எந்தவொரு தவறு அல்லது சட்டரீதியான பொறுப்பையும் ஒப்புக்கொள்ளவில்லை.

குழந்தைகள் மற்றும் பதின்மவயதினரை ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் செலவிட ஊக்குவிக்கும் அம்சங்களுடன் மெட்டா வடிவமைத்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இதனால் குழந்தைகள் மற்றும் சிறார்களின் மனநலன், உடல்நலன் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மெட்டா நிறுவனம், சமூக வலைத்தளங்களை பெற்றோரின் கட்டுப்பாட்டுடன் பிள்ளைகள் பார்க்கும்வகையில் வடிவமைக்கவும், மிகப்பெரிய நேரக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தவும் உள்ளது.

18 வயதுக்குள்பட்டோர் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்துக்கு மேல் சமூக வலைத்தளப் பார்க்கவே முடியாது, நள்ளிரவில் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்த முடியாது, காலை 8 - 3 மணி முதல் அறிவிப்புகள் வராது, தொடர்ந்து சமூக வலைத்தளத்தைப் பார்க்கும்போது குழந்தைகள், சிறார்கள் இடைவேளை எடுக்கும்படி தகவல்கள் அவ்வப்போது வரும் என்றும் கூறப்படுகிறது.

summary

Only 2 hours, a complete ban at night! New restriction on using Instagram!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments