நேபாள வெள்ளத்தால் உ.பி., பிகார் பாதிக்கப்படவில்லை! என்டிஆர்எஃப் தகவல்!
உ.பி., பிகாரில் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக என்டிஆர்எஃப் தகவல்...
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் உத்தரப் பிரதேசம், பிகாரில் இதுவரை எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் நிலைமையைத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தேசிய பேரிடர் மீட்பு படை தகவல் தெரிவித்துள்ளது. .
என்டிஆர்எஃப்- ஆய்வாளர் ஜெனரல் நரேந்திர சிங் புண்டேலா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பிகார், உத்தரப் பிரதேசத்தில் திடீர் வெள்ளத்தால் இதுவரை எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இரு மாநில அரசுகள் மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து நிலைமையைக் கண்காணித்து வருகிறோம்.
Advertisement
Advertisement
மத்திய நீர் ஆணையம் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து தகவல்களைப் புதுப்பித்து வருகிறது.
பிகாரின் வால்மீகி நகரில் (மேற்கு சம்பாரண் மாவட்டம்) கண்டகி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள இந்தியா-நேபாள எல்லைப் பகுதியிலுள்ள முதல் தடுப்பணை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அங்கு இதுவரை நேபாள திடீர் வெள்ளத்தின் தாக்கம் எதுவும் இல்லை.
இப்பகுதிகளில் வெள்ளம், நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டால், மக்களை வெளியேற்றுதல், நிவாரணம், மீட்புப் பணிகள் மேற்கொள்ள மொத்தம் 20 குழுக்கள் (பிகாரில் 9, உ.பி.யில் 11) என களத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூருக்கு அருகிலுள்ள குஷிநகர் மாவட்டத்தில் என்டிஆர்எஃப் குழு நிறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் நேபாளம் சந்தித்த மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகும். இந்தத் திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 165-ஆக உயர்ந்துள்ளது; மேலும் 300-க்கும் மேற்பட்ட இந்தியச் சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளனர் என்று அவர் கூறினார்.
The NDRF on Thursday said there has been no "adverse" impact of the devastating Nepal flash floods in the border areas of Bihar and Uttar Pradesh till now, but the situation is being continuously monitored in coordination with the two states governments.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.