இஸ்தான்புல் நகரில் இன்று 'மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம்' தொடர்பான முதல் கூட்டம்
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெறவுள்ள 'மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்' கீழ் நிறுவப்பட்ட 'மூலோபாய அரசியல் மற்றும் பாதுகாப்புக்கான குழுவின்' முதல் கூட்டம் குறித்து...
இஸ்லாமாபாத்: 'மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்' கீழ் நிறுவப்பட்ட 'மூலோபாய அரசியல் மற்றும் பாதுகாப்புக்கான குழுவின்' முதல் கூட்டம், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஒரு செயல்பாட்டு கட்டமைப்பாக மாற்றுவது மற்றும் பிராந்திய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
இதில், பாகிஸ்தான் சார்பில் துணைப் பிரதமர் முகமது இஷாக் தார், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் குவாஜா முகமது ஆசிஃப் மற்றும் ராணுவத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் தலைவருமான ஃபீல்ட் மார்ஷல் சையத் ஆசிம் முனீர் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
மேலும், இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் பங்கேற்பது, துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய சகோதர நாடுகளுடனான பாகிஸ்தானின் வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவையும், பிராந்தியத்தில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான அதன் விருப்பத்தையும் வெளிப்படுத்துகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்று நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் ராணுவ தளபதிகள் மற்றும் சவுதி அரேபியாவின் முக்கிய ராணுவ மற்றும் தூதரக அதிகாரிகள் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.
இந்த மாதத் தொடக்கத்தில் இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்காவில் கையெழுத்தான இந்த பாதுகாப்பு ஒப்பந்தம், சம்பந்தப்பட்ட நாடுகளின் கூட்டுப் பாதுகாப்பிற்காக ஒரு இஸ்லாமியக் கூட்டமைப்பை உருவாக்குவதை நோக்கிய முதல் உறுதியான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் விரிவடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன; ஏற்கனவே எகிப்து, வங்கதேசம் இதில் இணைவதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஆகஸ்ட் 7 ஆம் தேதி 'மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில்' கையெழுத்திட்டன.
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுந்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தின்படி, இந்த கூட்டமைப்பில் உள்ள ஏதேனும் ஒரு நாட்டின் மீதான தாக்குதல், அனைத்து நாடுகளின் மீதான தாக்குதலாகவே கருதப்படும்.
கூட்டு ராணுவப் பயிற்சிகள், உளவுத்துறை தகவல்களை பகிர்ந்துகொள்ளுதல், பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் மற்றும் ராணுவத் தளவாடங்களை கூட்டாக உற்பத்தி செய்தல் போன்ற அம்சங்கள் அடங்கும்.
இந்த கூட்டத்தின் மூலம் மூன்று நாடுகளை உள்ளடக்கிய ஒரு நிரந்தர அரசியல் மற்றும் பாதுகாப்பு உத்திசார் குழு மற்றும் அதற்கான நிர்வாக செயலகம் உருவாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
The inaugural meeting of the Strategic Political and Defence Committee established under the Makkah Joint Defence Agreement (Makkah Accord) will be held on Monday in Istanbul, Turkiye.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.