எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?
தொழிலதிபர் பில்கேட்ஸ் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டதாக எப்ஸ்டீன் கோப்புகளில் தெரிவித்திருப்பது பற்றி...
அமெரிக்க நீதித்துறை வெளியிட்டிருக்கும் எப்ஸ்டீன் கோப்புகளில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவில் சிறுமிகளை கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைதான பெரும் பணக்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன், சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இந்த நிலையில், எப்ஸ்டீன் பல்வேறு தரப்பினருடன் உரையாடிய மின்னஞ்சல்கள், பகிர்ந்த விடியோக்கள், புகைப்படங்கள், விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றைப் பொதுவெளியில் வெளியிட அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு நவம்பரில் சட்டம் இயற்றப்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து, கடந்த ஜன. 30 ஆம் தேதி 35 லட்சப் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் கோப்புகளை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது.
அதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தொழிலதிபர்கள் பில் கேட்ஸ், எலான் மஸ்க், அனில் அம்பானி, பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ உள்பட பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
ஜூலை 18, 2013 -ல் பில்கேட்ஸ் குறித்து தனக்குத்தானே எப்ஸ்டீன் அனுப்பிக் கொண்ட மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
”ரஷிய பெண்ணுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதால் பில்கேட்ஸ் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டார். அந்த நோயை குணப்படுத்தும் மருந்தை அப்போதைய மனைவி மெலிண்டாவுக்கு தெரியாமல் அனுப்புமாறு பில்கேட்ஸ் கூறினார்.
மெலிண்டாவுக்கும் பால்வினை நோய்த் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் அவருக்கு தெரியாமலேயே உணவில் மருந்தை கலக்க என்னிடம் உதவி கோரினார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Epstein files! Relationship with a Russian woman; did Bill Gates contract a sexually transmitted disease?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.