FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பழனி கோயில் நில முறைகேடு: வெள்ளைத்துரையின் பிணை மனு தள்ளுபடி

பழனி கோயில் நில முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட வெள்ளைத்துரை பிணை கோரி தாக்கல் செய்த மனுவை திண்டுக்கல் நீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்தது.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 5:51 am IST
பழனி கோயில்
பகிர்:

பழனி கோயில் நில முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட வெள்ளைத்துரை பிணை கோரி தாக்கல் செய்த மனுவை திண்டுக்கல் நீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்தது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலம், போலி ஆவணங்கள் மூலம் தனிநபா்களுக்கு முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் போலி அறக்கட்டளை நிா்வாகி முருகதாஸ், நிலத்தை வாங்கிய சேதுபதி, வெள்ளைத்துரை, உடந்தையாகச் செயல்பட்ட அன்வா்தீன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், பிணை கோரி சேதுபதி, வெள்ளைத்துரை ஆகியோா் திண்டுக்கல் முதலாவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் தனித் தனியே மனு தாக்கல் செய்தனா். இதில் வெள்ளைத்துரையின் மனுவைத் தள்ளுபடி செய்து நீதித்துறை நடுவா் பாக்கியராஜ் உத்தரவிட்டாா். அதேவேளையில், சேதுபதியின் மனு குறித்து திங்கள்கிழமை (ஆக. 3) விசாரிக்கப்படும் என்றாா்.

Advertisement

Advertisement

இதனிடையே, சிபிசிஐடி போலீஸாா் தரப்பில், முருகதாஸ் உள்ளிட்ட 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி முதலாவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை வருகிற 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவா் பாக்கியராஜ் உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments