2 வெளிநாட்டு எண்ணெய் கப்பல்களை சிறைப்பிடித்த ஈரான்!
2 வெளிநாட்டு எண்ணெய் கப்பகளை ஈரான் படைகள் சிறைப்பிடித்துள்ளது குறித்து...
ஈரானின் கடல்பகுதியில் எண்ணெய் கடத்தியதாகக் கூறி 2 வெளிநாட்டு எண்ணெய் கப்பல்களை அந்நாட்டுப் படைகள் சிறைப்பிடித்துள்ளன.
ஈரானின் ஃபார்சி தீவின் அருகில் டீசல் உள்பட சுமார் 10 லட்சம் லிட்டர் எண்ணெய்யை ஏற்றிச் சென்ற 2 வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் வியாழக்கிழமை (பிப். 5) சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, எண்ணெய் கப்பல்கள் புஷேர் நகரத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும், அந்தக் கப்பல்களில் இருந்த 15 பணியாளர்கள் சட்டத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ளதாகவும், ஈரானின் புரட்சிகர காவல்படையின் அதிகாரி ஜெனரல். ஹெய்தார் ஹோன்ரியன் மொஜாராட் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இருப்பினும், இந்தக் கப்பல்கள் எந்த நாட்டுக்குச் சொந்தமானவை எனும் தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும், அந்தக் கப்பல்கள் எண்ணெய் கடத்தலில் ஈடுபட்டன எனும் குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்படவில்லை.
முன்னதாக, 16 பணியாளர்களுடன் சென்ற வெளிநாட்டு எண்ணெய் கப்பல் ஒன்றைக் கடந்த டிசம்பர் மாதம் ஈரான் அதிகாரிகள் சிறைப்பிடித்தனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது முதல் பதவிக்காலத்தில், உலக நாடுகளுடன் ஈரான் 2015-இல் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து தன்னிச்சையாக விலகியதைத் தொடர்ந்து ஈரானின் இந்த நடவடிக்கைகள் தொடங்கியதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
Iranian forces have seized two foreign oil tankers, alleging that they were smuggling oil in Iranian waters.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.