எப்ஸ்டீனுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை! டிரம்ப்
எப்ஸ்டீன் கோப்புகள் குறித்து டிரம்பின் விளக்கம் பற்றி...
ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சிறுமிகளை கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன், சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜெஃப்ரி எப்ஸ்டீன் பிறருக்கும் தனக்குத்தானேவும் அனுப்பிய மின்னஞ்சல்கள், காவல்துறை விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலங்கள் அடங்கிய 35 லட்சம் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் கோப்புகளை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
இதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை எப்ஸ்டீன் முன்வைத்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் என சிலர் அளித்த வாக்குமூலமும் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றிருந்தன.
இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு எதிராக போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இந்த நிலையில், ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களுடன் டிரம்ப் பேசுகையில்,
“எப்ஸ்டீன் விவகாரத்தின் நான் மறைக்க எதுவும் இல்லை. நான் விடுவிக்கப்பட்டேன். ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.
எப்ஸ்டீன் வழக்கில் நான் முற்றிலும் விடுவிக்கப்பட்டேன். உண்மையில், சிலருடன் சேர்ந்து நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கக் கூடாது என்று ஜெஃப்ரி எப்ஸ்டீன் போராடினார்” எனத் தெரிவித்துள்ளார்.
I have no connection with Epstein! Donald Trump
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.