முகப்பு
உலகம்

காங்கோவில் எபோலாவுக்கு 600 பேர் பலி! அதிகரிக்கும் பரவலால் அவதி!

காங்கோவில் எபோலா பாதிப்புகளால் 600 பேர் பலியாகியுள்ளனர்...

Updated On : 9 ஜூலை 2026, 5:53 pm IST
காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் பலியானவரின் இறுதிச்சடங்கில் நிகழ்வில் அழும் உறவினர்கள் - கோப்புப் படம் | AP
பகிர்:

காங்கோ நாட்டில் எபோலா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ, சூடான் மற்றும் உகாண்டாவில் கடந்த சில மாதங்களாக எபோலா தொற்றின் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால், தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அந்நாடுகளின் அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், காங்கோ நாட்டில் இதுவரை எபோலா தொற்றுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 600 ஆக அதிகரித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

காங்கோவில், இதுவரை பாதிக்கப்படாத பகுதியாக அறியப்பட்ட த்ஷோபோ மாகாணத்தின் கிசங்கனியில் புதியதாக எபோலா பரவியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இத்துடன், காங்கோவில் எபோலாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,759 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த மே 15 அன்று புதிய பரவலாக அறிவிக்கப்பட்ட எபோலா தொற்றினால் 2 மாதங்களுக்குள் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளது ஆப்பிரிக்க நாடுகளிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே, காங்கோவில் எபோலா பாதிப்புகளுக்கு இடையே முறையாக ஊதியம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததைக் கண்டித்து நூற்றுக்கணக்கான மருத்துவப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

summary

the death toll from the Ebola outbreak in Congo has risen to 60.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments