FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

சிசேரியன் பிரசவங்கள்: துருக்கியில் 100 மருத்துவர்கள் இடைநீக்கம்

துருக்கியில் சிசேரியன் பிரசவங்கள் மேற்கொண்டதற்காக 100-க்கும் மேற்பட்ட மகப்பேறு மருத்துவர்கள் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Updated On : 12 ஜூலை 2026, 4:16 pm IST
மருத்துவர்கள் - கோப்புப்படம்.
பகிர்:

துருக்கியில் சிசேரியன் பிரசவங்கள் மேற்கொண்டதற்காக 100-க்கும் மேற்பட்ட மகப்பேறு மருத்துவர்கள் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சம்மந்தப்பட்ட மருத்துவர்களுக்கு அபராதம் விதித்ததோடு அவர்களை இடைநீக்கம் செய்து கட்டாயப் பயிற்சி பெறவும் உத்தரவிட்டுள்ளது.

2023ஆம் ஆண்டின் கடைசியாகக் கிடைத்த தரவுகளின்படி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பின் 38 நாடுகளிலேயே துருக்கியில்தான் சிசேரியன் பிரசவங்களின் விகிதம் மிக அதிகமாக உள்ளது.

Advertisement

Advertisement

அந்த ஆண்டில் அங்கு நடந்த ஒவ்வொரு 1,000 நேரடி பிரசவங்களிலும் சுமார் 615 பிரசவங்கள் சிசேரியன் முறையில் செய்யப்பட்டுள்ளன.

பெண்கள் இயற்கை முறையில் பிரசவிப்பதை வலியுறுத்தி வரும் துருக்கி அதிபர் எர்டோகன், அந்நாட்டில் அதிகரித்து வரும் விருப்பத் தேர்விலான சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த விரும்புகிறார்.

இதன் ஒரு பகுதியாக, தகுந்த மருத்துவக் காரணம் இன்றி தனியார் மருத்துவமனைகளில் விருப்பத்தின் பேரில் சிசேரியன் பிரசவம் செய்வதற்கு அந்நாட்டு அரசு ஏப்ரல் 2025ஆம் ஆண்டு முதல் தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments