வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதியை மறந்துவிட வேண்டாம்!
நிலவுடன், வெள்ளியும் தோன்றும் அதிசய காட்சியைப் பற்றி..
மிக அழகிய வளர்பிறை நிலவும், அதற்கு அருகே பளீச்சென்ற வெள்ளி நட்சத்திரமும், சனி என்று அழைக்கப்படும் ரெகுலஸ் கிரகமும் வானில் வர்ண ஜாலம் காட்டும் அரிய நிகழ்வைக் காண ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருக்கத்தான் வேண்டும்.
ஜூலை 17ஆம் தேதி சூரியன் மறைந்த பிறகு நிகழும் அழகான வெள்ளி - சந்திரன் இணைவைக் காணும் வாய்ப்பு எல்லாருக்கும் கிட்டுமா என்று தெரியவில்லை. பிறை நிலவின் மீது தெரியும் புவி ஒளியைக் கண்டு, ரசிப்பதோடு, பிரகாசமான மாலை நட்சத்திரமான வெள்ளிக்கு அருகில் ரெகுலஸ் விண்மீனையும் பார்க்க முடியுமாம்.
சரியாக, சூரியன் மறைந்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகு இது தெரியலாம். வானம் நல்ல இருட்டாக இருந்து மேகக் கூட்டங்கள் மறைக்காமல் இருந்தால் ஒரே பார்வையில் நிலா, வெள்ளி, ரெகுலஸ் விண்மீன்களைப் பார்க்கும் அரிய வாய்ப்பு கிடைக்கும்.
Advertisement
Advertisement
தொலைநோக்கிகள் வாயிலாக இவற்றைப் பார்ப்பது இன்னும் சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும். கடந்த மாதங்களோடு ஒப்பிட்டால் வெள்ளி நட்சத்திரமானது சற்று அளவில் சிறியதாகவே காணப்படும். என்றாலும் பிரகாசமாக நிலவுடன், வானில் வர்ண ஜாலத்தைக் காட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஜூலை 17ஆம் தேதி என்ன வேலை இருந்தாலும், சூரியன் மறைந்ததும், வானத்தைப் பார்க்க மறக்க வேண்டாம், முதலில், வெள்ளி நட்சத்திரத்தையும் நிலவையும் காணலாம். பிறகு, இருள் அதிகமாகும்போது வெள்ளி நட்சத்திரத்துக்கு அருகே மற்றொரு ரெகுலஸ் விண்மீனையும் காணலாம். இந்த இயற்கை ஜாலங்களைக் காண தவற வேண்டாம் என்று இயற்கை விரும்பிகள் கேட்டுக் கொள்கிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.