உதயமானது பிராய்லர் சிக்கன் கட்சி!
வங்கதேசத்தில் உருவாகியிருக்கும் பிராய்லர் சிக்கன் கட்சி பற்றி...
வங்கதேச அரசுக்கு எதிராக அந்நாட்டின் இளைஞர்கள் பிராய்லர் சிக்கன் கட்சி என்ற பெயரில் சமூக ஊடகங்களில் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர்.
வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வெள்ளத்தால் சூழ்ந்திருக்கும் நிலையில், உயர்நிலைக் கல்விக்கான பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று அரசு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இளைஞர்களின் போராட்டம் தொடர்பாக பேசிய அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சர் எஹ்சனுல் ஹக் மிலோன், அவர்களை பிராய்லர் கோழிகள் என்று விமர்சித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் ‘பிராய்லர் சிக்கன் கட்சி’ (Broiler Chicken Party) என்ற பெயரில் சமூக ஊடகங்களில் பக்கங்களைத் தொடங்கியுள்ளனர்.
கல்வித்துறை அமைச்சர் உடனடியாக பதவி விலகக் கோரி அந்தப் பக்கத்தில் பதிவிடப்பட்டு வருகின்றது. பிராய்லர் சிக்கன் கட்சியின் முகநூல் பக்கத்தை ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
மேலும், வங்கதேசம் முழுவதும் கல்வி அமைச்சருக்கு எதிராக மாணவர்களும் இளைஞர்களும் போராட்டத்தில் குதித்துள்ளதால், பிராய்லர் சிக்கன் கட்சியின் பதிவுகள் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றது.
இந்தியாவில் உரிமைக்காகப் போராடும் வேலையில்லாத இளைஞர்களை கரப்பான் பூச்சி போன்றவர்கள், சமூகத்தின் ஒட்டுண்ணிகள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் விமர்சித்த கருத்தால் ஆவேசமடைந்து இளைஞர்கள் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியை உருவாக்கினார்கள்.
பகடியாக உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்தில், மிகக் குறுகிய காலத்திலேயே கிட்டத்திட்ட 2 கோடிக்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர்.
தற்போது நீட் தேர்வு குளறுபடி உள்ளிட்டவைக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று அக்கட்சியினர் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
The Broiler Chicken Party has emerged!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.