FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

இந்திய முதலீட்டில் உருவாகும் ஈரான் சாபஹார் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல்!

ஈரானின் சாபஹர் துறைமுகத்தின் மீது அமெரிக்கா இன்று வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

Updated On : 17 ஜூலை 2026, 6:28 pm IST
அமெரிக்கத் தாக்குதலில் இடிந்து விழும் சாபஹர் துறைமுக கண்காணிப்பு கோபுரம் / அமெரிக்கப் பாதுகாப்புப் படை வீரர் - X
பகிர்:

இந்திய முதலீட்டில் உருவான ஈரானின் சாபஹர் துறைமுகத்தின் மீது அமெரிக்கா இன்று வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரான், ஆப்கானிஸ்தான், ஆா்மெனியா, அஜா்பைஜான், ரஷியா, மத்திய ஆசியா, ஐரோப்பிய நாடுகளுடன் இணைக்க உதவும் சாபஹாா் துறைமுகத்தில் இந்தியா முதலீடு செய்துள்ளது.

பாகிஸ்தானைப் புறக்கணித்து ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியாவை சாலை மற்றும் ரயில் வழித்தடத்துடன் இணைக்கும் சுமாா் 7,200 கி.மீ. தொலைவு சா்வதேச வட- தெற்கு வா்த்தக வழித்தட திட்டத்தை செயல்படுத்த சாபஹாா் துறைமுகத்தை ரூ. இந்தியா மேம்படுத்தி வருகிறது. இதில், ரூ. 1,000 கோடிக்கும் மேல் முதலீடு செய்ய இந்தியா ஒப்புக்கொண்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அமெரிக்க வான்வழித் தாக்குதலில் சாபஹர் துறைமுகம் சேதமடைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில், அங்குள்ள கண்காணிப்பு கோபுரம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை செயலர் பீட் ஹெக்ஸெத் சாபஹர் துறைமுகத்தின் கண்காணிப்பு கோபுரம் இடிந்து விழும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். மேலும், ஈரான் ஹோர்முஸை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை என்று அமெரிக்க பாதுகாப்புப் படை வீரர்கள் அங்கு தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்கா தொடர்ந்து சாபஹர் துறைமுகம் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. கோபுரம் இடிந்து விழுந்த போதும் தொடர்ந்து 3 முறை துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

துறைமுகத்திற்குள் வரும் வணிகப் போக்குவரத்தை கண்காணிக்க அந்த கோபுரம் அமைக்கப்பட்டிருந்ததாக ஈரான் தெரிவித்தது.

summary

US attacks Iran's Chabahar Port

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments