FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

கனடா காட்டுத்தீயால் வட அமெரிக்க நகரங்களில் மோசமான காற்றின் தரம்!

கனடா காட்டுத்தீயால் வட அமெரிக்க நகரங்களில் காற்றின் தரம் மோசமானது பற்றி...

Updated On : 19 ஜூலை 2026, 2:13 am IST
கனடா காட்டுத்தீயால் வட அமெரிக்க நகரங்களில் மோசமான காற்றின் தரம்
பகிர்:

கனடாவில் தீவிரமடைந்து வரும் காட்டுத்தீ காரணமாக பல்வேறு வட அமெரிக்க நகரங்களில் காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, கனடாவில் 858 இடங்களில் காட்டுத்தீ எரிந்து வருவதாகவும், அதில் 111 இடங்களில் தீ இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என்றும் அரசுத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, அமெரிக்காவின் மத்திய மேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள் வரை அடா்ந்த நச்சுப் புகைமூட்டம் பரவியுள்ளது.

உலகின் மிக மோசமான காற்று மாசுபாடு கொண்ட முக்கிய நகரங்களின் பட்டியலில் அமெரிக்காவின் டெட்ராய்ட், சிகாகோ, நியூயாா்க் மற்றும் மினியாபோலிஸ் ஆகிய நகரங்கள் முன்னணியில் உள்ளன.

Advertisement

Advertisement

சாதாரண காற்று மாசுபாட்டை விட இந்த காட்டுத்தீ புகை அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது என்று மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இந்த நச்சுப் புகை வான்வெளியில் பல வாரங்களுக்கு நீடிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில், ‘கனடா தனது காடுகளைச் சரியாகப் பராமரிக்காததே இந்த அவலநிலைக்குக் காரணம்’ என்று அந்நாட்டு அரசை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடுமையாகச் சாடினாா்.

மேலும், இச்சுற்றுச்சூழல் பாதிப்பைக் கையாள்வதற்காக அமெரிக்கவுக்கு ஏற்படும் இழப்பை, கனடா இறக்குமதிகளுக்கு விதிக்கப்படும் சுங்க வரியுடன் கூடுதலாகச் சோ்க்கப்போவதாகவும் அவா் எச்சரித்தாா்.

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டம் நடைபெறும் நியூஜொ்சி மைதானத்திலும் புகைமூட்டம் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், போட்டிக்கு முன்னதாக மழை பெய்ய வாய்ப்புள்ளதால் புகை தணியும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

summary

Poor air quality in North American cities due to Canadian wildfires

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments