முகப்பு
உலகம்

அணு ஆயுத நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டிரம்ப்

அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல் அளித்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளது குறித்து...

Updated On : 3 ஜூன் 2026, 7:51 pm IST
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - AP
பகிர்:

அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (ஜூன் 3) தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றமான சூழல் சீராகும்போது, அந்நாட்டின் உச்ச தலைவரான மோஜ்தபா கமேனியை சந்திக்க திட்டம் இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

விருது வென்ற அரசியல் பிரிவு பத்திரிகையாளரான மிராண்டா டெவைன், வாரந்தோறும் நடத்தும் பாட் ஃபோர்ஸ் ஒன் (Pod Force One) என்ற ஃபாட்காஸ்ட் (podcast) நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்துகொண்டு பேசும்போது இதனைத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

போரை முடிவுக்கு கொண்டுவருவதில் ஈரான் தலைவர் மோஜ்தபா கமேனியின் ஈடுபாடு குறித்த கேள்விக்கு நிகழ்ச்சியில் பதில் அளித்த டிரம்ப், அமெரிக்கா உடனான பகையை முடித்துக்கொள்ள கமேனி முழு ஈடுபாடு காட்டுவதாகவும், மிகுந்த மரியாதை அவர் மீது வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

''ஈரான் தலைவராக அவரால் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு ஏற்ப சிறப்பாக செயல்பட முடியவில்லை என்றாலும், பேச்சுவார்த்தையில் சிலவற்றிற்கு ஒப்புதல் அளிக்கிறார்'' என டிரம்ப் தெரிவித்தார்.

மேலும், அவரை நேரில் சந்திக்க விரும்புவதாகவும், நிபந்தனைகள் அமலுக்கு வருவதைப் பொருத்து, ஒருவேளை அனைத்தும் சுமூகமாக முடிந்தால், அவரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இத்துடன், ''ஈரானின் ராணுவப் படை தோற்கடிக்கப்பட்டதால், ஈரான் உடனான போரை பெரிய வெற்றியாகக் கருதுகிறோம். ஒப்பந்தங்களின்படி செயல்படவுள்ளோம். திட்டமிட்டபடி நேர்மறையாக நடக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. வேறு வழியில் அதை செய்து முடிப்போம்'' என அந்நிகழ்ச்சியில் டிரம்ப் தெரிவித்தார்.

summary

Donald Trump says Iran agrees to no nuclear weapons probably meet Supreme Leader Mojtaba Khamenei

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments