முகப்பு
உலகம்

நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்!

தன்னுடன் புகைப்படம் எடுக்க மெலோனி கெஞ்சியதாக அதிபர் டிரம்ப் கூறியதற்கு இத்தாலி அரசு கண்டனம்...

Updated On : 19 ஜூன் 2026, 9:17 pm IST
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி (கோப்புப் படம்) - AP
பகிர்:

இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, தன்னுடன் புகைப்படம் எடுக்க கெஞ்சியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதற்கு இத்தாலி அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) காலை தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், பிரான்ஸ் நாட்டில் நடந்து முடிந்த ஜி7 மாநாட்டில் இத்தாலி பிரதமர் மெலோனி தன்னுடன் புகைப்படம் எடுக்க வேண்டி கெஞ்சியதாகக் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நீண்டகால கூட்டாளியான இத்தாலியின் பிரதமர் குறித்த டிரம்ப்பின் இந்தப் பேச்சுக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், டிரம்ப்பின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டமிடப்பட்டிருந்த தனது அமெரிக்க பயணத்தை இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் அண்டோனியோ தஜானி ரத்து செய்துள்ளார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அதிபர் டிரம்ப்பின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக விடியோ வெளியிட்டுள்ள இத்தாலி பிரதமர் மெலோனி, நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்சமாட்டோம் எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள விடியோவில்,

“டொனால்ட் டிரம்ப்பின் பேச்சுக்கள் முற்றிலும் புனையப்பட்டவை. நான் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்துள்ளேன். அமெரிக்காவின் அதிபர் தனது நட்பு நாடுகளுடன் ஏன் இப்படி நடந்துக் கொள்கிறார் என எனக்குத் தெரியவில்லை. மேலும், இது முதல்முறை நடப்பதும் அல்ல.

மேற்குலக நாடுகள் மற்றும் அமெரிக்காவின் எதிரிகளுக்கு எதிராக அவர் இதுபோன்ற உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. அதற்கு மாறாக, சில தலைவர்களுடன் அவர் இணக்கமான நடைமுறையையே கடைப்பிடிக்கிறார்.

ஆனால், ஒன்றை அவர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்: இத்தாலியும் நானும் எதற்கும் கெஞ்சமாட்டோம்” எனக் கூறியுள்ளார்.

summary

Italian government has condemned Trump's claim that Italian PM Meloni begged to take a photo with him.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments