சமாதானத் தூதராக உருவெடுத்துள்ளது பாகிஸ்தான்: ஷெபாஸ் ஷெரீஃப் பெருமிதம்!
பாகிஸ்தான் சமாதானத் தூதராக உருவெடுத்துள்ளதாக பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் சமாதானத் தூதராக உருவெடுத்துள்ளதாக பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார்.
மேற்கு ஆசியாவில் பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளால் அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்தப்பட்டு, இரு நாடுகளுக்குமிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும், இதன்மூலம் உலகின் சமாதானத் தூதராக பாகிஸ்தான் உருவெடுத்ததாகவும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் கத்தார் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் மத்தியஸ்தம் செய்து நடத்திய பேச்சுவார்த்தையில், 60 நாள்களுக்குள் இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதை நோக்கமாகக் கொண்ட செயல் திட்டத்திற்கு அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டன.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, ஜூன் 18 அன்று அமெரிக்கா - ஈரான் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுபற்றி, பாகிஸ்தான் கடற்படை அகாடமியில் நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் பேசிய பாகிஸ்தான் பிரதமர், ”ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனின் சமீபத்திய பாகிஸ்தான் பயணம், அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தானின் முக்கிய பங்கை அங்கீகரிப்பதாக அமைந்தது” என்று கூறினார்.
மேலும், சர்வதேச மற்றும் உள்நாட்டு அச்சுறுத்தல்கள் போன்றே ஆபத்தான சூழல், பாதுகாப்பு சவால்கள் போன்றவற்றை பாகிஸ்தான் எதிர்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோல, தனது குற்றச்சாட்டுகள் தொடர்பான எந்தவொரு ஆதாரத்தையும் வழங்காமல், பாகிஸ்தானின் நிலைத்தன்மையைக் குலைக்க இந்தியா வேறு வகையில் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Pakistan's Prime Minister Shehbaz Sharif has stated that Pakistan has emerged as an ambassador of peace.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.