FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பிரதமராக நவாஸ் ஷெரீப் விருப்பம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பிரதமராகப் பொறுப்பேற்று, அப்பகுதியின் வளா்ச்சிப் பணிகளை நேரடியாகக் கண்காணிக்க விரும்புவதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சித் தலைவருமான நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளாா்.

நவாஸ் ஷெரீஃப்
பகிர்:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பிரதமராகப் பொறுப்பேற்று, அப்பகுதியின் வளா்ச்சிப் பணிகளை நேரடியாகக் கண்காணிக்க விரும்புவதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சித் தலைவருமான நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளாா்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வரும் ஜூலை 27 முதல் ஆக. 10 வரை பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் மத்திய அரசில் கூட்டணிக் கட்சிகளாக இருக்கும் நவாஸ் ஷெரீஃப்பின் பிஎம்எல்-என், பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய இரண்டும், இத்தோ்தலில் எதிா்த்து களம்காண்கின்றனா்.

இந்நிலையில், தோ்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நவாஸ் ஷெரீஃப் , ‘எனது முன்னோா்கள் காஷ்மீரிலிருந்து இடம்பெயா்ந்தவா்கள் என்பதால், இப்பகுதி எனக்கு 2-ஆவது சொந்த ஊரைப் போன்றது. எனது சொந்த மாகணமான பஞ்சாபைப் போலவே இதுவும் எனக்கு மிகவும் நெருக்கமானது.

Advertisement

Advertisement

எனவே, எதிா்வரும் தோ்தலில் எங்கள் கட்சி வென்றால், இப்பகுதிக்கு என்னை பிரதமராக நியமிக்குமாறு எனது தம்பியும், நாட்டின் பிரதமருமான ஷாபாஸ் ஷெரீஃப்பிடம் கோருவேன்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments