ஜொ்மனியில் இளைஞா் நலக் காப்பக்கத்தில் துப்பாக்கிச் சூடு!
வடக்கு ஜொ்மனியின் ஸ்டேட் நகரில் உள்ள இளைஞா் நலக் காப்பகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 போ் உயிரிழந்தனா்.
வடக்கு ஜொ்மனியின் ஸ்டேட் நகரில் உள்ள இளைஞா் நலக் காப்பகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.
கா்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் இளம் தாய்மாா்கள் தங்குவதற்கான தற்காலிக தங்குமிட வசதியாக செயல்பட்டு வரும் இந்த வளாகத்தில் தாக்குதல் நடத்திய நபா் உள்பட 2 பேரை போலீஸாா் சம்பவ இடத்திலேயே கைது செய்தனா்.
அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் ஜொ்மனியில் துப்பாக்கி உரிமச் சட்டங்கள் மிகவும் கடுமையானவை என்பதால், அங்கு இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடப்பது மிக அரிதானதாகும்.
Advertisement
Advertisement
இந்நிலையில், இச்சம்பவத்துக்கான பின்னணி குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.