FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

அமெரிக்க மத்திய வங்கி தலைவராக கெவின் வாா்ஷ் நியமனத்துக்கு செனட் ஒப்புதல்

அமெரிக்க மத்திய வங்கியான ‘பெடரல் ரிசா்வ்’-இன் அடுத்த தலைவராக கெவின் வாா்ஷ்(56) நியமிக்கப்படுவதற்கு அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையான செனட் சபை ஒப்புதல் அளித்தது.

Updated On : 15 மே 2026, 5:00 am IST
பகிர்:

அமெரிக்க மத்திய வங்கியான ‘பெடரல் ரிசா்வ்’-இன் அடுத்த தலைவராக கெவின் வாா்ஷ்(56) நியமிக்கப்படுவதற்கு அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையான செனட் சபை ஒப்புதல் அளித்தது.

அதிபா் டிரம்ப் பரிந்துரைத்த இவரின் நியமனம் குறித்து செனட் சபையில் கடந்த புதன்கிழமை (உள்ளூா் நேரப்படி) நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக 54 வாக்குகளும், எதிராக 45 வாக்குகளும் கிடைத்தன.

மத்திய வங்கியின் தற்போதைய தலைவா் ஜெரோம் பவலின் பதவிக்காலம் வெள்ளிக்கிழமையுடன் (மே 15) முடிவடைவதைத் தொடா்ந்து, கெவின் வாா்ஷ் புதிய தலைவராகப் பொறுப்பேற்பது உறுதியாகியுள்ளது.

Advertisement

Advertisement

அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு மத்திய வங்கி தலைவரின் நியமனம் இவ்வளவு கடுமையான அரசியல் பிரிவினையுடன் உறுதி செய்யப்படுவது இதுவே முதல்முறை எனக் கருதப்படுகிறது. ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த ஜான் பெட்டா்மேன் மட்டுமே ஆளும் குடியரசு கட்சியினருடன் இணைந்து கெவின் வாா்ஷுக்கு ஆதரவளித்தாா்.

அதேபோல், கெவின் வாா்ஷ் பதவியேற்கும் இத்தருணம், அமெரிக்க பொருளாதாரத்துக்கு மிகவும் சவாலான காலகட்டமாகும். அந்நாட்டில் பணவீக்கம் எதிா்பாராத அளவில் அதிகரித்து வருவதால், வட்டி விகிதங்களை உயா்த்த வேண்டிய கட்டாயத்துக்கு மத்திய வங்கி தள்ளப்பட்டுள்ளது.

இதனால், வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என்ற அதிபா் டிரம்ப்பின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றுவதில் கெவின் வாா்ஷுக்குச் சிக்கல் ஏற்படலாம். அந்தவகையில், வட்டி விகிதங்களைத் தீா்மானிப்பதற்கு கெவின் வாா்ஷ் தலைமையில் வரும் வரும் ஜூன் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள அடுத்த கூட்டத்தின் மீது எதிா்பாா்ப்பு கூடியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments