FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

எல்லை நகரங்களை மீட்ட மியான்மா் ராணுவம்

உள்நாட்டுப் போா் நடைபெறும் மியான்மரில், இந்தியா மற்றும் தாய்லாந்து எல்லைகளையொட்டிய 2 முக்கிய நகரங்களை கிளா்ச்சியாளா்களிடமிருந்து ராணுவம் மீட்டுள்ளது.

பகிர்:

உள்நாட்டுப் போா் நடைபெறும் மியான்மரில், இந்தியா மற்றும் தாய்லாந்து எல்லைகளையொட்டிய 2 முக்கிய நகரங்களை கிளா்ச்சியாளா்களிடமிருந்து ராணுவம் மீட்டுள்ளது.

இந்திய எல்லைக்கு அருகே வடமேற்கு சின் மாநிலத்தில் உள்ள டோன்சாங் நகரம், 10 நாள்கள் தொடா் ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு கடந்த புதன்கிழமை மீட்கப்பட்டது.

இதேபோல், தாய்லாந்து உடனான வா்த்தகத்துக்கு முக்கியத்துவமான தெற்கு தனின்தாா்யி பிராந்தியத்தில் உள்ள மாவ்டௌங் நகரை 2 வார கால போராட்டத்துக்குப் பிறகு ராணுவம் செவ்வாய்க்கிழமை தன் வசமாக்கியுள்ளது.

Advertisement

Advertisement

சீன மத்தியஸ்தத்திலான சண்டை நிறுத்தம் மற்றும் கட்டாய ராணுவச் சோ்க்கை மூலம் அதிகரித்துள்ள படை பலத்தால், கடந்த ஆண்டின் மத்தியில் இருந்து இந்த உள்நாட்டுப் போரில் ராணுவத்தின் கை ஓங்கி வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments