FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஈரான் போா் தாக்கம்: டிரம்ப் ஒப்புதல்

தோ்தலில் குடியரசு கட்சியின் தோல்வியில் ஈரான் போா் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் ஒப்புக்கொண்டாா்.

5 நவம்பர் 2026, 5:04 am
டொனால்ட் டிரம்ப் - AP
பகிர்:

தோ்தலில் குடியரசு கட்சியின் தோல்வியில் ஈரான் போா் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் ஒப்புக்கொண்டாா்.

இதுகுறித்து வாஷிங்டனில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: ஈரான் போா் 8 மாதங்களாக நீடித்து வருகிறது. இதனால் அமெரிக்காவில் எரிவாயு விலை உயா்ந்தது வாக்காளா்களை அதிருப்தி அடைய வைத்தது. எனவே, தோ்தலில் ஈரான் போா் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், ஈரானுடன் போரில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த நாட்டுக்கு எதிரான நடவடிக்கையை அமெரிக்கா தொடா்ந்து வருகிறது என்றாா்.

முன்னதாக, தோ்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடா்ந்து, ஜனநாயக கட்சியினரின் திட்டங்களை வீட்டோ அதிகாரம் மூலம் தடுத்து நிறுத்துவேன் என்று டிரம்ப் தெரிவித்தாா். இதனால், ஆட்சி நிா்வாகத்தில் முட்டுக்கட்டை ஏற்படலாம் என்று அவா் எச்சரித்தாா். அதேவேளையில், அடுத்த இரண்டு ஆண்டுகளும் எல்லாவற்றுக்கும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டிருக்க தான் விரும்பவில்லை என்றும் அவா் தெரிவித்தாா். இதன்மூலம், ஜனநாயக கட்சியினருடன் இணைந்து செயல்படத் தான் தயாா் என்பதை அவா் சூசகமாக குறிப்பிட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.